May 19, 2024

Seithi Saral

Tamil News Channel

சென்னையில் சில வார்டுகளில் பாஜக 2-ம் இடம்

1 min read

BJP ranks 2nd in some wards in Chennai

22.2.2022
சில வார்டுகளில் அ.தி.மு.க.வை பின்னுக்கு தள்ளி பாரதீய ஜனதா 2-ம் இடம் பிடித்தது.

பாரதீய ஜனதா

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் திமுக தனிப்பெரும்பான்மையாக 21 மாநகராட்சிகளையும் கைப்பற்றியுள்ளது. அதேபோல், நகராட்சி, பேரூராடி வார்டுகளையும் பெரும்பாலான இடங்களை கைப்பற்றி திமுக அமோக வெற்றி பெற்றது.

சென்னையில் உள்ள 200 வார்டுகளில் இதுவரை 156 வார்டுகளுக்கு முடிவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், 100-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று மாநகராட்சியை திமுக தன்வசமாக்கியது.

வெற்றி

இந்த நிலையில், சென்னை மாநகராட்சியில் ஒரு வார்டில் பாஜக வெற்றிபெற்றுள்ளது. சென்னை மாநகராட்சி கோடம்பாக்கம் மண்டலம் மேற்கு மாம்பலம் 134-வது வார்டில் பாஜக சார்பில் போட்டியிட்ட உமா ஆனந்த் வெற்றிபெற்றுள்ளார்.
பாஜக வேட்பாளர் உமா ஆனந்த் 5 ஆயிரத்து 539 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். சென்னை மாநகராட்சி தேர்தலில் பாஜக பெற்ற ஒரே வெற்றி இதுவாகும்.

2-வது இடம்

சென்னை மாநகராட்சி வார்டு முடிவுகளில் தி.மு.க.-அ.தி.மு.க. இடையே போட்டி நிலவினாலும், 174-வது வார்டில் அ.தி.மு.க.வை பின்னுக்கு தள்ளி பா.ஜ.க. 2-வது இடத்தை பிடித்தது.

இந்த வார்டில் தி.மு.க. வேட்பாளர் ராதிகா 6,250 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பா.ஜ.க. 1847 வாக்குகளை பெற்று 2-வது இடத்திலும், அ.தி.மு.க. 1,395 வாக்குகளை பெற்று 3-வது இடத்தையும் பெற்றது.
அதேபோல் 19-வது வார்டிலும் பா.ஜ.க. 2-வது இடத்தை பிடித்தது. இந்த வார்டில் தி.மு.க. வெற்றி பெற்றது. அ.தி.மு.க. 3-வது இடத்தை பெற்றது. இதேபோல், 54 மற்றும் 187 ஆகிய வார்டுகளிலும் பா.ஜ.க. 2-வது இடத்தை பிடித்துள்ளது.

*

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The reCAPTCHA verification period has expired. Please reload the page.