இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 6,915 பேராக குறைந்தது; 180 பேர் சாவு
1 min read
Daily corona exposure in India drops to 6,915; 180 deaths
1.3.2022
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 6,915 பேராக குறைந்தது. ஒரே நாளில் 180 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது.
இந்நிலையில், இன்று காலை 8 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 6,915 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது வரை 92,472 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இன்றைய கொரோனா பாதிப்பு 0.77 சதவீதம் ஆகும். 180 பேர் பலியான நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 5,14,023 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றில் இருந்து 4.23 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும், கொரோனா தடுப்பூசி செலுத்தியோர் எண்ணிக்கை 177.70 கோடியை தாண்டியுள்ளது.