பீகாரில் பட்டாசு தயாரிக்கும்போது வெடி விபத்தில் 7 பேர் சாவு
1 min read
7 killed in Bihar firecracker blast
4.3.2022
பீகார் மாநிலத்தில் பட்டாசு ஆலையில் பட்டாசு தயாரிக்கும்போது ஏற்பட்ட வெடி விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.
பட்டாசு
பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டத்தில் உள்ள கஜ்வாலிசாக் பகுதியில் வசிக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று இரவு வழக்கம்போல் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்ட போது, திடீரென பட்டாசுகள் வெடித்தது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த வெடிவிபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.
அதிக சத்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டதால், அடுத்தடுத்து அருகில் இருந்த மூன்று வீடுகள் பலத்த சேதமடைந்ததாக போலீசார் தெரிவித்தனர். ஜேசிபி உதவியுடன் இடிபாடுகளை அகற்றும் பணி நடைபெற்று வருவதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.