உக்ரைன் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி 2-வது நாளாக ஆலோசனை
1 min read
Prime Minister Modi’s 2nd day consultation on Ukraine issue
4.3.2022
உக்ரைன் விவகாரம் தொடர்பாக வெளியுறவுத்துறை மந்திரி அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார்.
ஆலோசனை
உக்ரைன்-ரஷியா போர் தீவிரம் அடைந்துள்ளது. இந்த நிலையில் 9-வது நாளாக நேற்றும் ரஷியா படைகள் ஆக்ரோஷமான தாக்குதலை நடத்தியது. கார்கீவ் நகரில் உள்ள அரசு கட்டிடங்கள், பல்கலைக்கழக வளாகங்கள், காவல் துறை அலுவலகங்களை குறி வைத்து தாக்குதல் நடத்தி வருவதால் அங்கிருந்தவர்கள் வெளியேறி உள்ளனர்.
உக்ரைனின் கார்கிவ், கீவ் நகரங்களைக் கைப்பற்ற ரஷியா தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது.
அங்கிருக்கும் இந்தியர்கள் நடந்தாவது மேற்கு நகரங்களின் எல்லைக்கு வந்துவிடுமாறு இந்தியத் தூதரகம் அறிவுறுத்தியது.
முக்கிய நகரங்கள் மீதான தாக்குதல்களை ரஷியா தீவிரப்படுத்தி உள்ளது. நூற்றுக்கணக்கான தாய்மார்கள் போர் மண்டலத்திலிருந்து தப்பிக்க தங்கள் குழந்தைகளுடன் எல்லையைத் தாண்டி போலந்துக்குச் சென்று உள்ளனர்.
ரஷியாவின் உக்கிர தாக்குதலில் நகரம் முழுவதும் திரும்பும் திசையெல்லாம் நெருப்பு குழம்புகளும் புகையுமாக காணப்படுகிறது. முக்கிய நகரங்கள் மீது குண்டுகள் விழும் சத்தம் கேட்ட வண்ணம் உள்ளன.