இந்தியாவில் புதிதாக 2,568 பேருக்கு கொரோனா; 97 பேர் சாவு
1 min read
Corona for 2,568 newcomers in India; 97 deaths
15/3/2022
இந்தியாவில் இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,568 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா
இந்தியாவில் கொரோனா 3-வது அலை இறுதிக்கட்டத்தில் இருக்கிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை தினசரி பாதிப்பு 3 ஆயிரத்து 116 ஆக இருந்தது. நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் இந்த எண்ணிக்கை மேலும் குறைந்து 2 ஆயிரத்து 503 ஆனது. கடந்த 680 நாட்களில் இதுதான் மிகவும் குறைவாகும்.
இந்நிலையில் இன்று புதிதாக 2,568 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது. இதுதொடர்பாக ஒன்றிய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2 ஆயிரத்து 568 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,29,96,062 ஆக அதிகரித்துள்ளது.
97 பேர் சாவு
அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 97 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5,15,974 ஆக உயர்ந்துள்ளது. இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 4,722 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,24,46,171 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 33,917 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 1,80,40,28,891 பேருக்கு (இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 19,64,423 பேர்) கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே இந்தியாவில் கொரோனா பாதிப்பை கண்டறிய நேற்று ஒரே நாளில் 7,01,773 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 77,97,54,156 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது