June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

பிரம்மோஸ் சூப்பர் சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி

1 min read

Success of BrahMos supersonic missile test

23/3/022
பாதுகாப்புத்துறையின் பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை இன்று விண்ணில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.

பிரமோஸ் ஏவுகணை

நவீன புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய பிரம்மோஸ் சூப்பர் சோனிக் ஏவுகணையை டி.ஆர்.டி.ஓ. எனப்படும் பாதுகாப்பு , ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு தயாரித்துள்ளது. கடந்த ஜனவரியில் ஒடிசா மாநிலம் பாலசோர் கடற்கரையில் இருந்து பிரம்மோஸ் சூப்பர் சோனிக் ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதித்து பார்க்கப்பட்டது.

இந்நிலையில் இன்று அந்தமான், நிகோபார் தீவு கடல்பகுதியில், போர்க் கப்பலில் இருந்து பிரம்மோஸ் ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதித்து பார்க்கப்பட்டது. சோதனையின் போது இலக்கை துல்லியமாக தாக்கியது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.