குழந்தை பெற்ற 10-ம் வகுப்பு மாணவி;பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு வலைவீச்சு
1 min read
10th grade student who gave birth to a child; Web site for rapist
25/3/2022
திருப்பதி அருகே நிர்வாண வீடியோவை காட்டி 10-ம் வகுப்பு மாணவி பலாத்காரம் செய்யப்பட்டார். இதில் அவர் குழந்தை பெற்றார். இந்த சம்பவம் தொடர்பாக குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர்.
10ம் வகுப்பு மாணவி
ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். சித்தூர் அடுத்த எல்ல குண்டல பள்ளியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது34). எலக்ட்ரிசியன் வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு காலை சிறுமி பள்ளிக்கு சென்றார். மதிய உணவு இடைவேளையின் போது பள்ளியில் இருந்து வெளியே வந்த சிறுமியிடம் சென்ற ராஜேஷ் உன்னுடைய பெற்றோர் உன்னை அழைத்து வர கூறியதாக தெரிவித்தார்.
பாலியல் பலாத்காரம்
இதையடுத்து சிறுமி ராஜேஷ் பைக்கில் ஏறி சென்றார். அப்போது ராஜேஷ் சிறுமியை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து சென்று வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்தார்.
பின்னர் சிறுமியை நிர்வாணமாக வீடியோ எடுத்துள்ளார். இதுகுறித்து யாரிடமாவது தெரிவித்தால் கொலை செய்து விடுவதாகவும் நிர்வாண வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.
இதனால் பயந்து போன சிறுமி இது குறித்து வெளியில் யாரிடமும் கூறவில்லை. இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ராஜேஷ் நிர்வாண வீடியோவை காட்டி பலமுறை பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார்.
குழந்தை
இந்த நிலையில் கடந்த புதன் கிழமை சிறுமிக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. சிறுமியை சிகிச்சைக்காக அங்கு உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அவரது பெற்றோர் அழைத்துச் சென்றனர்.
அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர் சிறுமி நிறைமாத கர்ப்பிணியாக உள்ளதாக தெரிவித்தனர்.
இதையடுத்து சிறுமியை பிரசவத்திற்காக அதே ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.
இதுகுறித்து சிறுமியின் தாய் ரொட்டி செர்லப்பள்ளி போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேஸ்வரலு வழக்கு பதிவு செய்து ராஜேஷை தேடி வருகிறார். சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ராஜேஷுக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர்.