June 10, 2026

Seithi Saral

Tamil News Channel

உத்தரபிரதேச முதல்வராக யோகி ஆதித்யநாத் மீண்டும் பதவியேற்றார்; விழாவில் மோடி பங்கேற்பு

1 min read

Yogi Adityanath re-elected Uttar Pradesh Chief Minister; Modi’s participation in the ceremony

25.3.2022
உத்தர பிரதேச மாநில முதல்வராக யோகி ஆதித்யநாத் இரண்டாவது முறையாக பதவியேற்று கொண்டார். அவருடன், 2 துணை முதல்வர்கள், அமைச்சர்கள் பதவியேற்றனர். விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மீண்டும் ஆட்சி

உத்தரபிரதேச சட்டசபைக்கு சமீபத்தில் நடந்த தேர்தலில், பா.ஜ.க, அமோக வெற்றி பெற்று, தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியை தக்க வைத்து சாதனை படைத்துள்ளது. மொத்தம் உள்ள 403 தொகுதிகளில், பா.ஜ.க, கூட்டணி 273 தொகுதிகளை கைப்பற்றியது.
தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்னரே, பா.ஜ.க., மேலிடம் யோகி ஆதித்யநாத்தை முதல்வர் வேட்பாளராக அறிவித்தது. இதை தொடர்ந்து பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் முதல்வராக யோகி ஆதித்யநாத் தேர்வு செய்யப்பட்டார்.

பதவி ஏற்பு

தொடர்ந்து லக்னோவில் உள்ள வாஜ்பாய் மைதானத்தில் நடந்த விழாவில் இரண்டாவது முறையாக முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவியேற்று கொண்டார். அவருக்கு கவர்னர் ஆனந்திபென் படேல் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். தொடர்ந்து கேசவ பிரசாத் மவுரியா, பிரஜேஷ் பதாக் ஆகியோர் துணை முதல்வராக பதவியேற்றனர்.

இந்த விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், அனுராக் சிங் தாகூர், ஸ்மிருதி இரானி உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், பா.ஜ., தலைவர் நட்டா, குஜராத், ஹரியானா, உத்தர்கண்ட் கோவா மாநில முதல்வர்கள் மற்றும் பா.ஜ., முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.யோகி பதவியேற்பு விழாவில் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர்.

==
கடவுளின் பெயரால் பொது இடத்தை ஆக்கிரமிப்பதா?
ஐகோர்ட்டு கண்டனம்

சென்னை, மார்ச்.26-
: கடவுளின் பெயரால் பொது இடத்தை ஆக்கிரமித்து கோவில் கட்டி நீதிமன்றத்தின் கண்களை மறைக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் கண்டித்ததுடன், அடுத்த 2 மாதங்களில் ஆக்கிரமிப்பை அகற்றி உத்தரவிட்டது.

கோவில் நிலம் ஆக்கிரமிப்பு

நாமக்கல்லில் சாலையை ஆக்கிரமித்து மாரியம்மன் கோவில் கட்டப்பட்டுள்ளதாக பாப்பாயி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தெரிவித்ததாவது:-
பொது இடத்தை ஆக்கிரமித்து புதிய கோவில்களை கட்டும்படி எந்த கடவுளும் கேட்பதில்லை. கடவுளின் பெயரால் பொது இடத்தை ஆக்கிரமித்து கோவில் கட்டி நீதிமன்றத்தின் கண்களை மறைக்க முடியாது.

கடவுளே ஆக்கிரமித்திருந்தாலும் அதை அகற்ற நீதிமன்றம் உத்தரவிடும். கோவில் நிர்வாகம் கட்டியுள்ள கட்டுமானங்களை 2 மாதங்களில் அப்புறப்படுத்த வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து யோகி ஆதித்யநாத் தலைமையிலான ஆட்சியில் 24 புதிய மந்திரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். முந்தைய ஆட்சியில் மந்திரிகளாக இடம் பெற்றிருந்த 24 பேர் இம்முறை நீக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் தினேஷ் சர்மா, சதீஷ் மஹானா, அசுதோஷ் டாண்டன், ஸ்ரீகாந்த் சர்மா, சித்தார்த் நாத் சிங் உள்ளிட்டோர் அடங்குவர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *