June 15, 2026

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் ஒரேநாளில் கொரோனாவுக்கு 4,100 பேர் பலியா?-சுகாதாரத்துறை விளக்கம்

1 min read

4,100 people die of corona in one day in India?

26.3.2022
இந்தியாவில் கொரோனாவுக்கு ஒரேநாளில் 4,100 பேர் பலியானார்கள். இந்த திடீர் உயர்வுக்கு என்ன காரணம் என்பது பற்றி இந்திய சுகாதார அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

ஓய்ந்து வரும் கொரோனா

இந்தியாவில் கொரோனா தொற்றின் 3-வது அலை ஓய்ந்து கொண்டிருக்கிறது. கடந்த 22, 23, 24 ஆகிய தேதிகளில் தினசரி கொரோனா பாதிப்பு தினமும் சற்றே அதிகரித்து வந்தது. நேற்று மன்தினம் இந்த நிலை மாறியது.
கடந்த வியாழக்கிழமை 1,938 பேருக்கு தொற்று உறுதியானது. நேற்று இந்த எண்ணிக்கை 1,685 ஆக சரிவு அடைந்தது. இந்நிலையில் நேற்று புதிதாக 1,660 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது.
இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்கள் வருமாறு:-
இந்தியாவில் இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1 ஆயிரத்து 660 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,30,18,032 ஆக அதிகரித்துள்ளது.

4,100 பேர் பலி

அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 4,100 பேர் (நேற்றைய பலி எண்ணிக்கை 83) உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5,20,855 ஆக உயர்ந்துள்ளது.

மராட்டிய மாநிலத்தில் விடுபட்ட பலி எண்ணிக்கையில் 4,005 பேரும், கேரளாவில் விடுபட்ட பலி எண்ணிக்கையில் 79 பேரும் இன்றைய கொரோனா உயிரிழப்பில் சேர்க்கப்பட்டதே இந்த உயர்வுக்கு காரணம்.

இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 2,349 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,24,80,436 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 16,741 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 1,82,87,68,476 பேருக்கு (இன்று காலைவரை கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 29,07,479 பேர்) கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே இந்தியாவில் கொரோனா பாதிப்பை கண்டறிய நேற்று முன்தினம் ஒரே நாளில் 6,58,489 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 78,63,02,714 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *