May 17, 2024

Seithi Saral

Tamil News Channel

ஹிஜாப் விவகாரம்: பல்கலைக்கழக முந்தைய தேர்வை புறக்கணித்த 40 மாணவிகள்

1 min read

Hijab affair: 40 students who boycotted university pre-selection

30.3.2022
ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வரக்கூடாது என்பதற்காக பல்கலைக்கழக முந்தைய தேர்வை 40 மாணவிகள் புறக்கணித்தனர்.

ஹிஜாப் விவகாரம்

உடுப்பியில் உள்ள கல்லூரி ஒன்றில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்ததற்கு போட்டியாக, இந்து மாணவர்கள் காவி துண்டை அணிந்து வந்தனர். இந்த விவகாரம் பூதாகாரமான நிலையில் பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணியக் கூடாது என்று அரசு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

ஹிஜாப் விவகாரத்தில் அரசின் முடிவுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. இந்த சூழலில் மார்ச் 28-ம்தேதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் தொடங்கும் என்றும், இதில் பங்கேற்பவர்கள் ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என்றும் அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில் நேற்று தேர்வு தொடங்கியபோது முஸ்லீம் மாணவிகள் சிலர் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத வந்தனர். அவர்களை தேர்வு கண்காணிப்பாளர்கள் திருப்பி அனுப்பினர்.

தேர்வு எழுதவில்லை

பெரும்பாலான முஸ்லிம் மாணவிகள் தேர்வு எழுத ஹிஜாப் அணியாமல் வந்ததாகவும் அவர்களிடம் இதுகுறித்து கேட்கப்பட்டபோது, தேர்வு அறைக்குள் ஹிஜாப் அணிவதை விட தேர்வு தங்களுக்கு முக்கியம் என்று தெரிவித்ததாகவும் கூறியதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

நேற்றுமுன்தினம் தேர்வு எழுத தகுதி பெற்றவர்களில் சுமார் 21 ஆயிரம் பேர் தேர்வு எழுத வரவில்லை. இதேபோன்று கடந்த 2021-ல் தேர்வு எழுத வராதவர்களின் எண்ணிக்கை 3,700 ஆக இருந்த நிலையில், தற்போது அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை.

ஹிஜாப் விவகாரம் தொடர்பாக கர்நாடக அரசு கோர்ட்டு கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில் அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் தேர்வில் பங்கேற்காதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தைச் சேர்ந்த 40 முஸ்லிம் மாணவிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முதல்நிலைப் பல்கலைக்கழகத் தேர்வில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தனர்.

சட்ட போராட்டம்

நேற்று தேர்வை புறக்கணித்தவர்களில் குந்தாப்பூரைச் சேர்ந்த 24 மாணவிகளும், பைந்தூரைச் சேர்ந்த 14 பேரும், உடுப்பி அரசு பெண்கள் பியூ கல்லூரியைச் சேர்ந்த இரண்டு பேரும் வகுப்பறைகளில் ஹிஜாப் அணிவது தொடர்பான சட்டப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

முன்னதாக நடைமுறைத் தேர்வையும் பெண்கள் புறக்கணித்தனர். ஆர்என் ஷெட்டி கல்லூரியில், 28 முஸ்லிம் மாணவிகளில் 13 பேர் தேர்வெழுதினர். சில மாணவிகள் ஹிஜாப் அணிந்து தேர்வு மையத்திற்கு வந்தபோதும் அனுமதி மறுக்கப்பட்டது.

உடுப்பியில் உள்ள பண்டார்கர் கல்லூரியில் ஐந்தில் நான்கு மாணவிகள் தேர்வெழுதினர், பஸ்ரூர் சாரதா கல்லூரி மாணவிகள் அனைவரும் தேர்வெழுதினர். நாவுந்தா அரசினர் கல்லூரியின் எட்டு மாணவிகளில் 6 பேர் பரீட்சையில் இருந்து விலகினர்.

மாவட்டத்தில் உள்ள சில தனியார் கல்லூரிகள் மாணவர்கள் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத அனுமதித்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.