இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 1, 260 பேராக குறைந்தது
1 min read
Daily corona exposure in India has dropped to 1,260
2.4.2022
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 1, 260 பேராக குறைந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது. அதன்விவரம் வருமாறு:-
இந்தியாவில் இன்று காலைவரை கடந்த 24 மணி நேரத்தில் 1 ஆயிரத்து 260 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய நாள் பாதிப்பான 1 ஆயிரத்து 335- ஐ விட குறைவாகும்.
இதனால், நாட்டில் கொரோனா பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து 27 ஆயிரத்து 35 ஆக அதிகரித்துள்ளது.
இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 1 ஆயிரத்து 404 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 24 லட்சத்து 92 ஆயிரத்து 326 ஆக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 13 ஆயிரத்து 445 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
83 பேர் சாவு
ஆனாலும், கொரோனா தாக்குதலுக்கு ஒருநாளில் 83 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 21 ஆயிரத்து 264 ஆக அதிகரித்துள்ளது.
அதேவேளை நாடு முழுவதும் இதுவரை 184 கோடியே 52 லட்சத்து 44 ஆயிரத்து 856 தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.