June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 1,096 பேராக குறைவு- 81 பேர் உயிரிழப்பு

1 min read

Daily corona infection in India drops to 1,096 – 81 deaths

3.4.2022
இந்தியாவில் நேற்று முன் தினம் 1,335 பேரும், நேற்று 1,260- பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று பாதிப்பு 1,096- ஆக குறைந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளது. தமிழகம் உள்பட பல மாநிலங்களில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு இரட்டை இலக்க எண்களில் பதிவாகி வருவது மக்களுக்கு ஆறுதலை கொடுத்துள்ளது. அந்த வகையில், இந்தியாவில் நேற்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் 1,096- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
இந்தியாவில் நேற்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் 1,096 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு காரணமாக மேலும் 81 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்பில் இருந்து 1,447 பேர் குணம் அடைந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5,21,345 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 13,031 ஆக உள்ளது. இந்தியாவில் இதுவரை போடப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 184.66 கோடியாகும். நேற்று ஒருநாளில் மட்டும் 12,75,495 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று முன் தினம் 1,335 பேரும், நேற்று 1,260 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று பாதிப்பு 1,096- ஆக குறைந்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.