நமது பிரதமர்களில் பெரும்பாலானோர் எளிய குடும்பங்களில் இருந்து வந்தவர்கள்;பிரதமர் மோடி பெருமிதம்
1 min read
Most of our Prime Ministers come from simple families; Prime Minister Modi is proud
14.4.2022
நமது பிரதமர்களில் பெரும்பாலானோர் எளிய குடும்பங்களில் இருந்து வந்தவர்கள் என்று பிரதமர் மோடி கூறினார்.
அருங்காட்சியகம்
நாட்டின் பிரதமர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட பிரதான்மந்திரி சங்க்ரஹாலயா அருங்காட்சியகத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.
பின்னர் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:-
நமது பிரதமர்களின் பெரும்பாலானவர்கள் எளிமையான பின்னணியில் இருந்து வந்தவர்கள் என்பது இந்தியர்களுக்கு பெருமை சேர்க்கும் விஷயம். தொலைதூர கிராமப்புறங்களில் இருந்து வந்து மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து, விவசாயி குடும்பத்தில் இருந்து வந்து, பிரதமர் பதவிக்கு வருவது இந்திய ஜனநாயகத்தின் சிறந்த மரபுகள் மீதான நம்பிக்கையை வலுப்படுத்துகிறது.
ஒவ்வொரு சகாப்தத்திலும் ஒவ்வொரு தலைமுறையிலும் ஜனநாயகத்தை மிகவும் நவீனமானதாகவும், அதிகாரம் பெற்றதாகவும் மாற்றுவதற்கான தொடர்ச்சியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒன்று அல்லது இரண்டு விதிவிலக்குகளைத் தவிர்த்து, ஜனநாயக வழியில் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் பெருமைமிக்க பாரம்பரியத்தை நாங்கள் கொண்டுள்ளோம். அதனால்தான் ஜனநாயகத்தை நமது முயற்சிகளுடன் வலுப்படுத்த வேண்டிய அவசியம் எங்களுக்கும் உள்ளது.
நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த அருங்காட்சியம் மிகப்பெரிய உத்வேகமாக வந்துள்ளது. இங்கு வரும் மக்கள் நாட்டின் முன்னாள் பிரதமர்களின் பங்களிப்புகளை அறிந்து, அவர்களின் பின்னணி மற்றும் போராட்டம் குறித்து அறிந்து கொள்வார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.