June 10, 2026

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் புதிதாக 1,007 பேருக்கு கொரோனா; ஒருவர் சாவு

1 min read

Corona for 1,007 newcomers in India; One is death

14.4.2022
இந்தியாவில் இந்தியாவில் புதிதாக 1,007 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டனர்.

இந்தியாவில் கொரோனா

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது. அதன்விவரம் வருமாறு:-

இந்தியாவில் நேற்று கடந்த 24 மணி நேரத்தில் 1 ஆயிரத்து 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பான 1 ஆயிரத்து 88-ஐ விட குறைவாகும்.
இதனால், நாட்டில் கொரோனா பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து 39 ஆயிரத்து 23 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று காலை வரைகடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 818 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 25 லட்சத்து 6 ஆயிரத்து 228 ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 11 ஆயிரத்து 58 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேவேளை, நாடு முழுவதும் கொரோனா தாக்குதலுக்கு நேற்றுகாலை வரை கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் மட்டுமே உயிரிழந்துள்ளார். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 21 ஆயிரத்து 737 ஆக அதிகரித்துள்ளது.
அதேவேளை நாடு முழுவதும் இதுவரை 186 கோடியே 22 லட்சத்து 76 ஆயிரத்து 304 தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *