தி.மு.க. ஆட்சி பற்றி ஆங்கில டிவி சேனல் கருத்துக்கணிப்பு
1 min read
English TV channel poll about DMK Goverment
16.4.2022
தி.மு.க. ஆட்சி பற்றி ஆங்கில டிவி சேனல் கருத்துக்கணிப்பு நடத்தி வெளியிட்டுள்ளது.
கருத்துக்கணிப்பு
டெல்லியில் உள்ள இரண்டு ஆங்கில ‘டிவி சேனல்’கள் சமீபத்தில் தமிழகத்தில் ஒரு கருத்துக் கணிப்பை நடத்தின. இவை, இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை இப்படி கருத்துக் கணிப்பை நடத்தி வருகின்றன.
இவைகளுக்கு இந்த கருத்துக் கணிப்பை ஒரு தனியார் நிறுவனம் நடத்தி தருகிறது. இந்நிறுவனத்தின் ஊழியர்கள், ‘மொபைல் போன்’ மற்றும் படிவம் வாயிலாக இந்தக் கணிப்பை நடத்தினர்.
சட்டம் ஒழுங்கு
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க., அரசு எப்படி செயல்படுகிறது; இந்த ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு எப்படி உள்ளது; மக்களின் தேவைகளை அறிந்து அரசு செயல்படுகிறதா; முந்தைய அ.தி.மு.க., அரசை விட தி.மு.க., அரசு எந்த விதத்தில் நன்றாக செயல்படுகிறது’ என, 20 கேள்விகளுக்கு மேல் கேட்கப்பட்டு மக்களிடம் ‘சர்வே’ எடுக்கப்பட்டது.
சர்வே முடிவுகள் ‘டிவி’யில் வெளியிடப்படவில்லை என்றாலும், இந்த விபரங்கள் டில்லி அரசியல் வட்டாரங்களில் ‘லீக்’ ஆகியுள்ளன. இந்த முடிவுகள் தி.மு.க.,விற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் என்கின்றன அந்த வட்டாரங்கள்.
‘தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின் ரவுடியிசம் தலை துாக்கிஉள்ளது; சட்டம் – ஒழுங்கு சரியில்லை; தி.மு.க.,வினர் அராஜக செயல்களில் ஈடுபடுகின்றனர்; கோவில்களை இடிப்பதில் இந்த அரசு ஏன் அதிக அக்கறை காட்டுகிறது; தேர்தல் வாக்குறுதிகள் பல நிறைவேற்றப்படவில்லை;
நீட் தேர்வு
‘நீட்’ தேர்வை ரத்து செய்ய முடியாது என தெரிந்தும் அதை நீக்குவோம் என இந்த அரசு நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறது; ஹிந்தி எதிர்ப்பு முடிந்து போன விஷயம் என்றாலும் அதை மீண்டும் மீண்டும் பேசுவது வீண்; இதையெல்லாம் பார்க்கும் போது பழனிச்சாமி அரசே மேல்’ என சர்வே முடிவுகள் தெரிவிக்கிறதாம்
இப்படியே போனால், 2024 லோக்சபா தேர்தலில் இப்போது வெற்றி பெற்றது போல 38 தொகுதிகளில் தி.மு.க., கூட்டணி வெற்றி பெற முடியாது என்கிறதாம் சர்வே.இன்னொரு பக்கம், மக்களின் வெறுப்பிலிருந்து எப்படி மீண்டு வருவது என தி.மு.க.,விற்கு ஆலோசனையும் சொல்கிறதாம் இந்த கருத்து கணிப்பு. எது எப்படியோ, ஸ்டாலின் அரசு செயல்படும் விதம் சரியில்லை என்பதை இந்த சர்வே பட்டவர்த்தனமாக தெரிவிக்கிறதாம்.