June 5, 2026

Seithi Saral

Tamil News Channel

இடைத்தேர்தல்: மே.வங்கத்தில் திரிணாமுல் வெற்றி

1 min read

By-election: Trinamool wins in Bengal

16.4.2022
மே.வங்கத்தில் நடந்த இடைத்தேர்தலில் திரிணாமுல் வெற்றி பெற்றது. சட்டிஸ்கர், மராட்டியத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.

இடைத்தேர்தல்

மேற்கு வங்கத்தின் பாலிகங்கே, சத்தீஸ்கரின் கைராகர், பிகாரின் போச்சான், மராட்டியத்தின் கோலாப்பூர் ஆகிய நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மற்றும் மேற்குவங்க மாநிலத்தின் அசன்சோல் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் ஏப்ரல் 12 ஆம் தேதி நடைபெற்றது. இந்த 4 சட்டப்பேரவைத் தொகுதிகள் மற்றும் ஒரு மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது.

வெற்றி

இதில் மேற்கு வங்க மாநிலம் அசன்சோல் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் வெற்றிபெற்றது. இந்த தொகுதியை பாஜகவிடம் இருந்து திரிணமூல் காங்கிரஸ் கைப்பற்றுகிறது.
இதுபோலவே பிகாரில் ஆர்ஜேடி வெற்றி பெற்றுள்ளது. லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) பீகாரில் உள்ள போச்சாஹான் சட்டமன்றத் தொகுதியில் 36,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. சத்தீஸ்கரின் கைராகர் மராட்டியத்தின் கோலாப்பூர் ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *