சர்க்கரை ஏற்றுமதியில் இந்தியா புதிய சாதனை
1 min read
India sets new record in sugar exports
19.4.2022
இந்தியாவின் சர்க்கரை ஏற்றுமதி, இதுவரை இல்லாத உச்சத்தை தொட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சர்க்கரை ஏற்றுமதி
இந்தியாவின் சர்க்கரை ஏற்றுமதி, இதுவரை இல்லாத உச்சத்தை தொட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. உலக அளவில் சர்க்கரை உற்பத்தியில், பிரேசில் நாட்டிற்கு அடுத்தப்படியாக இந்தியா 2ஆவது இடத்தில் உள்ளது.
இந்நிலையில், 2021 – 2022ஆம் நிதியாண்டில் இந்தியாவின் சர்க்கரை ஏற்றுமதி மதிப்பு, 4.6 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 65 சதவீதம் அதிகம் என்றும் கூறப்பட்டுள்ளது.