இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு சற்று குறைந்தது
1 min read
Daily corona exposure in India is slightly lower
25.4.202
இந்தியாவில் நேற்று முன்தினத்துடன் ஒப்பிடும்போது இன்றைய கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது. அதன் விவரம் வருமாறு:-
இந்தியாவில் இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 541 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய நாள் பாதிப்பான 2 ஆயிரத்து 593-ஐ விட குறைவாகும்.
இதனால், நாட்டில் கொரோனா பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து 60 ஆயிரத்து 86 ஆக அதிகரித்துள்ளது.
இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 1 ஆயிரத்து 862 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 25 லட்சத்து 21 ஆயிரத்து 341 ஆக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 16 ஆயிரத்து 522 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா தாக்குதலுக்கு இன்று காலைவரை கடந்த 24 மணி நேரத்தில் 30 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 22 ஆயிரத்து 223 ஆக அதிகரித்துள்ளது.
அதேவேளை நாடு முழுவதும் இதுவரை 187 கோடியே 71 லட்சத்து 95 ஆயிரத்து 781 தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.
மேற்கண்ட தகவலை இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.