கேரளாவில் 7-ந்தேதிவரை கனமழைக்கு வாய்ப்பு
1 min read
Chance of heavy rain in Kerala till 7th
4.5.2022
இடுக்கி மாவட்டத்திற்கு இன்றும், நாளையும் மலப்புரம் மாவட்டத்திற்கு இன்றும் கனமழை காரணமாக மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனமழை
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் தெற்கு அந்தமான் அருகே 6-ந்தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் கேரள மாநிலத்திலும் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அந்த மாநில வானிலை மையம் எச்சரித்துள்ளது. அதாவது வருகிற 7-ந்தேதி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் காற்றின் வேகம் 30 முதல் 40 கி.மீட்டர் வேகத்தில் இருக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இடுக்கி மாவட்டத்திற்கு இன்றும் (புதன்கிழமை) நாளை(5ந்தேதி)யும் மலப்புரம் மாவட்டத்திற்கு இன்றும் கனமழை காரணமாக மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனமழை 64.5 மி.மீட்டர் முதல் 115.5 மி.மீட்டர் வரை இருக்கும் என்பதால் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.