இந்தியாவில் பொதுமக்களை மையமாகக் கொண்டே வளர்ச்சிப் பணிகள்- பிரதமர் மோடி பேச்சு
1 min read
Public-centric development work in India – Prime Minister Modi
4/5/2022
இந்தியாவில் பொதுமக்களை மையமாகக் கொண்டே வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று பிரதமர் மோடி கூறினார்.
மோடி
பேரிடரை எதிர்கொள்வதற்கான நெகிழ்திறன் உள்கட்டமைப்புக்கான நான்காவது சர்வதேச மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக இன்று துவக்க உரையாற்றினார்.
ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன், கானா அதிபர் நானா அட்டோ டன்க்வா அகுபோ-அட்டோ, ஜப்பான் பிரதமர் ப்யூமியோ கிஷிடா மற்றும் மடகாஸ்கர் அதிபர் ஆண்ட்ரி நாரினா ரஜோலினா ஆகியோரும் நிகழ்ச்சியில் உரையாற்றினார்கள்.
இதில் பிரதமர் மோடி பேசியதாவது:-
உள்கட்டமைப்பு
ஒருவரும் விடுபட்டு விடக்கூடாது என்பதே நிலையான வளர்ச்சி இலக்குகளின் உள்ளார்ந்த நோக்கம் என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.அதனால்தான் ஏழைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவும், அவர்களது விருப்பங்களை நிறைவேற்றும் வகையிலும், அடுத்த தலைமுறைக்கான உள்கட்டமைப்பை உருவாக்குவதில் நாங்கள் தொடர்ந்து உறுதியாக உள்ளோம். பொதுமக்களை மையமாக கொண்டே வளர்ச்சிப் பணிகள் நடைபெறுகிறது.
பருவநிலை மாற்றத்தை இந்தியா நேரடியான வழியில் எதிர்கொள்கிறது. எந்த ஒரு உள்கட்டமைப்பு வளர்ச்சிப் பயணத்திலும் மக்கள்தான் மையமாக இருக்கவேண்டும். அதை தான் இந்தியாவில் நாங்கள் செய்கிறோம்.
உள்கட்டமைப்பை நெகிழ்திறன் வாய்ந்ததாக நாம் மாற்றினால், நமக்காக மட்டுமல்லாமல், பல எதிர்கால தலைமுறையினருக்கும் பேரிடர்களை நாம் தடுக்கலாம்.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.