பாகிஸ்தானில் இருந்து போதைப்பொருளுடன் வந்த டிரோன் சுட்டுவீழ்த்தப்பட்டது
1 min read
A drone carrying drugs from Pakistan was shot down
10.5.2022
பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் டிரோன் மூலம் 10 கிலோ போதைப்பொருள் கடத்தப்பட்டது. அந்த டிரோனை டிரோனை எல்லை பாதுகாப்பு வீரர்கள் சுட்டு வீழ்த்தினர்.
டிரோன்
பாகிஸ்தான் பகுதியில் இருந்து ஆளில்லா டிரோன் ஒன்று இந்திய எல்லை பகுதிக்குள் வந்து கொண்டிருந்தது. நேற்று முன்தினம் இரவு 11.15 மணி அளவில் டிரோன் பறக்கும் சப்தத்தை கேட்ட பாதுகாப்புப்படை வீரர்கள் துப்பாக்கியால் 9 முறை சுட்டதாக தெரிவித்தனர்.
அதன் பின்னர் நடத்திய தேடுதலின் போது, டிரோன் மூலம் போதைப்பொருள் கடத்த முயன்றதும், அந்த் டிரோனில் 10 கிலோ ஹெராயின் இருந்ததும் தெரியவந்தது.