தமிழகத்தில் இன்று 40 பேருக்கு கொரோனா
1 min read
Corona for 40 people in Tamil Nadu today
10.5.2022
தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு 40 ஆக உயர்ந்தது.
தமிழகத்தில் கொரோனா
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு நிலவரத்தை மாநில மக்கள் நல்வாழ்வாழ்வுத்துறை வெளியிட்டு வருகிறது. இன்று வெளியிடப்பட்டது. அதன் விவரம் வருமாறு:-
தமிழகத்தில் மேலும் 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. நேற்று 38 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் இன்று 40 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 20ல் இருந்து 23 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவால் இன்று உயிரிழப்பு ஏதும் பதிவாகவில்லை. இதுவரை மொத்தம் 38,025 பேர் உயிரிழந்தனர்.
இன்று ஒரே நாளில் 53 பேர் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 454 இல் இருந்து 441 ஆக குறைந்தது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.