தாஜ்மஹாலில் மூடப்பட்ட 22 அறைகளில் சாமி சிலைகள் உள்ளதா?-வழக்கு விசாரணை தொடங்கியது
1 min read
Are there Sami statues in the 22 closed rooms in the Taj Mahal?
12.5.2022
தாஜ்மஹாலில் மூடப்பட்ட 22 அறைகளில் சாமி சிலைகள் உள்ளதாக தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணை தொடங்கியது.
தாஜ்மஹால்
உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலில் திறக்கப்படாமல் உள்ள 22 அறைகளைத் திறந்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு தொல்லியல் ஆய்வு மையத்திற்கு உத்தரவிடக் கோரிய மனுவை அலகாபாத் ஐகோர்ட்டு விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. அயோத்தியின் பாஜக செய்தித் தொடர்பாளரான டாக்டர்.ரஜ்னீஷ் என்பவர் தொடுத்த மனு, கோர்ட்டில் விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் அமைந்துள்ள தாஜ்மஹால் கட்டப்படுவதற்காக, அங்கிருந்த தேஜாலாயா எனும் சிவன் கோயில் இடிக்கப்பட்டதாகப் புகார் உள்ளது. இக்கோயிலின் சிலைகள், தாஜ்மகாலில் திறக்கப்படாமல் பூட்டப்பட்டிருக்கும் 22 அறைகளில் இருப்பதாகவும் சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது. இதை திறந்து பார்க்க உத்தரவிடக்கோரி வழக்கு தொடுக்கப்பட்டது.
தாஜ்மஹால் கட்டப்படுவதற்கு முன், அப்பகுதியில் கோயில் இருந்ததாகக் கூறி தற்போது மீண்டும் தொடுக்கப்பட்ட வழக்கு அலகாபாத் ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்துள்ளது.