இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 2,827 பேராக குறைந்தது- 24 பேர் உயிரிழப்பு
1 min read
Daily corona infection in India drops to 2,827 – 24 deaths
12.5.2022
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 2,827 பேராக குறைந்தது. ஒரு நாளில் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா
இந்தியாவில் இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் 2,827 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 2,897 பேருக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று பாதிப்பு சற்று குறைந்தது.
இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் 24 பேர் உயிரிழந்தனர். கடந்த செவ்வாய்க்கிழமை தொற்று பாதிப்புக்கு 54 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை குறைந்தது. நாடு முழுவதும் இதுவரை மொத்தம் 5,24,181 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 4,31,13,413 ஆக உயர்ந்தது. தற்போது சிகிச்சையில் 19,067 பேர் உள்ளனர்.
இன்று காலைவரை கடந்த 24 மணி நேரத்தில் 3,230 பேர் குணமடைந்தனர். நாடு முழுவதும் இதுவரை மொத்தம் 4,25,70,165 பேர் குணமடைந்துள்ளனர்.
இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் 4,71,276 சளி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
நேற்று ஒரே நாளில் 14,85,292 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இதுவரை மொத்தம் 190,83,96,788 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.