மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்கிறது?
1 min read
Is the internal price of central government employees rising?
12.5.2022
மத்திய அரசு ஊழியர்களுக்கு வரும் ஜூலை மாதம் அகவிலைப்படி மீண்டும் உயர்த்தப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
அகவிலைப்படி
மத்திய அரசு ஊழியர்களுக்கு விலைவாசி உயர்வுக்கு ஏற்ப ஆண்டுக்கு இரு முறை அகவிலைப்படி உயர்த்தப்படுவது வழக்கம். ஆனால் கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக கடந்த 2020, 2021 ஆகிய இரு ஆண்டும் ஜனவரி மாதம் அகவிலைப்படி வழங்குவது நிறுத்தப்பட்டது.
2021 ஆம் ஆண்டு ஜூலை மற்றும் அக்டோபர் மாதங்களில் 17 சதவீதம் மற்றும் 31 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இந்த நிலையில், 2022 மார்ச்சில் 7 ஆவது ஊதியக்குழுவின் பரிந்துரையின் படி அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்பட்டு 34 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதற்காக ரூ. 9,544 கோடி செலவாகும் என்றும், இதன் மூலம் 46.67 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 68.63 லட்சம் ஓய்வூதியர்கள் பயனடைவர் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், வரும் ஜூலை மாதம் அகவிலைப்படி மீண்டும் உயர்த்தப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. மார்ச்சில் சில்லறை விலைவாசி உயர்வு விகிதம் 6.95 சதவீதமாக அதிகரித்துள்ளதால், மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தி 38 சதவீதமாக உயர்த்தப்பலாம் என கருதப்படுகிறது.
அகவிலைப்படி 38 சதவீதமாக உயர்த்தப்பட்டால், 56,900 ரூபாய் அடிப்படை சம்பளம் பெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியானது 21,622 ரூபாயாக உயரும்.
==
தமிழகத்தில் 6 இடங்கள் உள்பட 57 இடங்களுக்கான மாநிலங்களவை தேர்தல் தேதி அறிவிப்பு12.5.2022
தமிழகத்தில் 6 இடங்கள் உள்பட 57 இடங்களுக்கான மாநிலங்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.
மாநிலங்களவை தேர்தல்
தமிழ்நாடு உள்பட 15 மாநிலங்களில் காலியாகும் 57 இடங்களுக்கு ஜூன் 10 ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் ஆர்.எஸ் பாரதி, டிகேஎஸ் இளங்கோவன், ராஜேஷ் குமார், நவநீத கிருஷ்ணன், எஸ்.ஆர் பால சுப்பிரமணியன், ஏ விஜயகுமார் ஆகிய 6 எம்.பிக்களின் பதவிக்காலம் வரும் ஜுன் 29 ஆம் தேதியுடன் முடிவுக்கு வர உள்ளது.