இந்திய தலைமை தேர்தல் ஆணையாளராக ராஜீவ் குமார் நியமனம்
1 min read
Rajiv Kumar appointed Chief Election Commissioner of India
12.5.2022
இந்திய தலைமை தேர்தல் ஆணையாளராக ராஜீவ் குமார், நாட்டின் குடியரசு தலைவரால் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
தலைமை தேர்தல் ஆணையர்
இந்திய தலைமை தேர்தல் ஆணையாளராக பதவி வகித்து வரும் சுசில் சந்திரா பதவி காலம் வருகிற மே 14ந்தேதியுடன் நிறைவடைகிறது. இதனையடுத்து அவர் ஓய்வு பெறுகிறார்.
இதனால், காலியாகவுள்ள அந்த பதவிக்கு புதிய தலைமை தேர்தல் ஆணையாளரை நாட்டின் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று நியமித்து அதற்கான உத்தரவை வெளியிட்டு உள்ளார்.
அதன்படி, மூத்த தேர்தல் ஆணையாளராக உள்ள ராஜீவ் குமார் வருகிற 2022ம் ஆண்டு மே 15ந்தேதி முதல் இந்திய தலைமை தேர்தல் ஆணையாளராக பதவி வகித்திடுவார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சுசில் சந்திரா தலைமையில், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட், பஞ்சாப் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தலை நடப்பு ஆண்டில் தேர்தல் ஆணையம் நடத்தி உள்ளது.