1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு
1 min read
Summer vacation announcement for students in grades 1 through 9
12.5.2022
தமிழ்நாட்டில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வுகள் இன்றுடன் முடிவடைகின்றன. அவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
தேர்வு
தமிழ்நாட்டில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இம்மாதம் 31-ந்தேதி வரை தேர்வுகள் நடக்கின்றன.
மேலும் 1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கும் நடப்பு கல்வியாண்டுக்கான தேர்வுகள் நடந்து வருகின்றன. கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் தேர்வு நாட்கள் மட்டும் பள்ளிக்கு வந்தால் போதும். மற்ற நாட்களில் வரத்தேவை இல்லை என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்தார்.
கோடை விடுமுறை
இந்த நிலையில்,1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வுகள் நாளையுடன் முடிவடைகின்றன. இதனையடுத்து, நாளை மறுநாள் (மே 14) முதல் ஜூன் 12ஆம் தேதி வரை மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 13 ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.