தருமபுரம் ஆதீனத்தில் பட்டின பிரவேச விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
1 min read
The hunger strike at Dharmapuram Aadeenam started with the flag hoisting ceremony
12.5.2022
தருமபுரம் ஆதீனத்தில் பட்டின பிரவேச விழா கொடியேற்றத்துடன் தொடங்கி உள்ளது.
பட்டின பிரவேச விழா
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் உள்ள ஞானபுரீஸ்வரர் கோவிலில் வைகாசி பெருவிழா மற்றும் ஆதீன குரு, குருபூஜை விழா, பட்டினப் பிரவேச பல்லக்கு நிகழ்ச்சி ஆகியவை வருகிற 22-ந் தேதி நடக்கின்றது.
இந்த விழாவிற்கான தொடக்க நிகழ்ச்சியாக இன்று தருமபுர ஆதீனத்தில் ஞானபுரீஸ்வரர் கோவில் சன்னதியில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்று விழா நடந்தது.
11 நாட்கள் நடைபெறும் இந்த இந்தத் விழாவில் முக்கிய நிகழ்வான வருகிற 18-ஆம் தேதி சாமிக்கும், அம்பாளுக்கும் திருக்கல்யாண விழாவும், 20-ஆம் தேதி திருத்தேர் உற்சவமும், 21-ஆம் தேதி காலை காவிரியில் தீர்த்தவாரியும் நடைபெறுகிறது.
தொடர்ந்து 22-ஆம் தேதி தருமபுர ஆதினம் 27-வது குருமா சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சாமிகள் பல்லக்கில் அமர்ந்து வீதியுலா செல்லும் பட்டினப்பிரவேசம் விழா நடைபெறுகிறது.
இந்த விழாவிற்கான கொடியேற்றம் ஆதீனத்தில் உள்ள ஞானபுரீஸ்வரர் கோவிலில் இன்று நடந்தது.
முன்னதாக கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து தருமபுர ஆதீன கர்த்தர் முன்னிலையில் விழாவிற்கான ரிஷபகொடி ஏற்றப்பட்டது. இதில் ஆதீனத்தின் கட்டளைத் தம்பிரான் சாமிகள் மற்றும் பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.