காமராஜர் காலத்தில் கட்டப்பட்ட பாலத்தின் உறுதித் தன்மை எப்படி? – அதிகாரிகள் ஆய்வு
1 min read
What is the stability of the bridge built during the Kamaraj era? – Inspection by authorities
12.5.2022
நாமக்கல் மாவட்டம் பள்ளி பாளையத்தில் காமராஜர் காலத்தில் கட்டப்பட்ட பாலத்தின் உறுதித் தன்மை குறித்து நெடுஞ்சாலை துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
காமராஜர் காலத்து பாலம்
நாமக்கல் மாவட்டம் பள்ளி பாளையத்தில் காமராஜர் காலத்தில் கட்டப்பட்ட பாலத்தின் உறுதித் தன்மை குறித்து நெடுஞ்சாலை துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
பாலம் கட்டப்பட்டு 62ஆண்டுகள் நிறைவடைந்து இருப்பதால் இன்று மாநில நெடுஞ்சாலை துறை ஆராய்ச்சி நிலைய உதவி இயக்குநர் மனோன்மணி தலைமையிலான குழு ஆய்வு மேற்கொண்டது. அப்போது பாலத்தில் உள்ள 32 தூண்கள் உறுதியாக இருப்பதை நவீன கருவிகள் கொண்டு நெடுஞ்சாலை துறை உறுதி செய்தது.
நாளையும் ஆய்வு நடைபெற உள்ள நிலையில், ஆய்வின் முடிவுகள் அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டு பாலத்தை வலுப்படுத்த தேவையான சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.