தாலி கட்டும் நேரத்தில் மணமகள் சாவு
1 min read
Death of the bride during the construction of the thali
13.5.2022
திருமணத்தின் போது, தாலி கட்டும் நேரத்தில் மணப்பெண், மயங்கி மணமகன் மீது விழுந்து பலியான சம்பவம் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
திருமணம்
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில், திருமண மேடையில், தாலி கட்டும் நேரத்தில் மணப்பெண், மயங்கி மணமகன் மீது விழுந்து பலியான சோகம் திருமண மண்டபமே சோகத்தில் மூழ்கியது.
மணமேடையில், மணமக்களுக்கு, ஐயர் வேதங்கள் முழங்க, தாலி கட்டும் வைபவம் நடந்து கொண்டிருக்கிறது. அப்போது மணமகன் வெல்லக் கட்டியை எடுத்து மணமகள் தலையில் வைக்கவும், மணமகள் மயங்கி சரியவும் சரியாக இருந்தது.
உடனடியாக உறவினர்கள் மணமகளை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் மணமகள் வரும் வழியியேலே உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர் இந்தச் சம்பவம் வியாழக்கிழமையன்று மதுரவாடா பகுதியில் நடந்துள்ளது.
ஐதராபாத்தைச் சேர்ந்த மணமகள் ஸ்ருஜானாவின் (22) பெற்றோர் இதுபற்றி கூறும்போது, “எங்கள் மகள் கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார்” என்று கூறியுள்ளனர். ஆனால், ஸ்ருஜானாவுக்கு திருமணத்தில் விருப்பமில்லாமல் இருந்தாரா? அதனால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சந்தேக மரணமாக வழக்குப் பதிவு செய்திருக்கும் போலீசார் உடற்கூராய்வு முடிவுகள் வரும் வரை அமைதிகாக்க வேண்டும் என கூறினர். திருமண மண்டபத்தில், விஷச் செடிகளையும் காவல்துறையினர் கைப்பற்றியிருப்பதாகக் கூறப்படுகிறது.