கோழி கூண்டில் சிக்கி சிறுத்தை பலி
1 min read
Trapped in a chicken coop and killed the leopard
13.5.2022
வால்பாறையில் கோழி கூண்டில் சிக்கி பலியான சிறுத்தையின் உடல் வனத்துறையினரால் எரிக்கப்பட்டது.
சிறுத்தை புலி
ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனக்கோட்டம் வால்பாறை
வனச்சரகத்திற்குட்பட்ட பழைய வால்பாறை வரட்டுப்பாறை பகுதியைச் சேர்ந்தவர் உஸ்மான். இவரது வீட்டிற்கு பின்புறம் உள்ள கோழி கூண்டில் சிக்கிய ஆண் சிறுத்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்தது.
தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து ஆய்வு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து மானாம்பள்ளி வனச்சரகர் மணிகண்டன், வால்பாறை வனச்சரகர் வெங்கடேஷ் ஆகியோர் முன்னிலையில் வனத்துறையின் கால்நடை டாக்டரை கொண்டு சிறுத்தையின் உடற்கூறு ஆய்வு நடத்தப்பட்டது.
உடற்கூறு ஆய்வு முடிந்ததும் அட்டகட்டி பகுதியில் சிறுத்தையின் உடல் எரியூட்டப்பட்டது.
இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
கோழியை படிப்பதற்காக வந்த சிறுத்தையின் முன்னங்கால் கூண்டில் சிக்கியது. கூண்டிலிருந்து கால்களை விடுவிக்க போராடியபோது சிறுத்தையின் தலை கூண்டில் பலமாக மோதி காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் சிறுத்தை இறந்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
உடற்கூறு ஆய்வு அறிக்கை வந்த பிறகுதான் சிறுத்தை இறப்புக்கான முழு காரணம் தெரியவரும்.
இவ்வாறு தெரிவித்தனர்.