வருகிற 28-ந் தேதி கருணாநிதி சிலையை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு திறந்து வைக்கிறார்
1 min read
Vice President Venkaiah Naidu will unveil the statue of Karunanidhi on the 28th.
13.5.2022
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவ சிலை வரும் 28 ஆம் தேதி திறக்கப்பட உள்ளது.
கருணாநிதி சிலை
சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை வளாகத்தில், கலைஞர் கருணாநிதிக்கு சிலை அமைக்கப்பட்டு வரும் நிலையில், இந்த சிலை 1.56 கோடி செலவில் அமைக்கப்படுகிறது.
இந்த நிலையில், சென்னை அண்ணாசாலையில் ஓமந்தூரார் அரசினர் வளாகத்தில் அமைக்கப்பட்டு வரும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவ சிலை வரும் 28 ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கருணாநிதியின் உருவ சிலையை திறந்து வைக்கிறார்.