இந்தியாவில் மேலும் 2,858 பேருக்கு கொரோனா
1 min read
Corona for a further 2,858 people in India
14.5.2022
இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 2,858 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.
இந்தியாவில் கொரோனா
இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பில் பெரிதான மாற்றம் இல்லை. கடந்த வியாழக்கிழமை 2,827 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. நேற்று இந்த எண்ணிக்கை சற்று அதிகரித்து 2,841 ஆக இருந்தது. இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் 2,858 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நாட்டில் இதுவரையில் இந்த தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கை 4 கோடியே 31 லட்சத்து 16,254 லிருந்து 4,31,19,112 ஆக உயர்ந்தது.
இந்தியாவில் ஒரே நாளில் 3,355 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இந்தியாவில் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,25,73,460 லிருந்து 4,25,76,815 ஆக உயர்ந்துள்ளது.
11 பேர் சாவு
நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 18,604 லிருந்து 18,092 ஆனது. இந்தியாவில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 11 பேர் உயிரிழந்தனர். இதுவரை 5,24,201 பேர் உயிரிழந்தனர்.
இந்தியாவில் ஒரே நாளில் 15,04,734 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 191.15 கோடி டீஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
மேற்கண்ட தகவலை இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.