July 4, 2025

Seithi Saral

Tamil News Channel

பயணி தாக்கியதில் அரசு பஸ் நடத்துனர் பலி

1 min read

Government bus driver killed in passenger attack

14.5.2022
சென்னையில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற அரசு பஸ்சில் பயணி தாக்கி நடத்துநர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடத்துனர்

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து அரசு பேருந்து விடியற்காலை 2 மணிக்கு விழுப்புரம் நோக்கி புறப்பட்டது. இந்த பேருந்தை விழுப்புரம் பணிமனை சேர்ந்த டிரைவர் குணசேகரன் நடத்துனராக பெருமாள் (வயது 56) ஆகியோர் இயக்கி வந்துள்ளனர்.

தகராறு

அதிகாலை 3:30 மணிக்கு மதுராந்தகம் புறவழிச்சாலையில் பயணி ஒருவர் ஏறி உள்ளார். இவரிடம் பேருந்தின் நடத்துனர் பெருமாள், பயணச் சீட்டு வாங்குமாறு வலியுறுத்தியுள்ளார். பேருந்தில் ஏறிய பயணி அளவுக்கு அதிகமான மது போதையில் இருந்ததால் டிக்கெட் எடுக்க முடியாது என்று தகராறு செய்துள்ளார்.
இதனால் பேருந்து நடத்துனர் பெருமாளுக்கும் பயணிக்கும் வாக்குவாதம் முற்றி தகராறு ஏற்பட்டது. அதில் மதுபோதையில் இருந்த பயணி பேருந்து நடத்துனர் பெருமாளை அடித்துள்ளார்.

பரிதாப சாவு

இதனால் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த மற்ற பயணிகள் மது போதையில் இருந்த பயணியை மதுராந்தகம் அருகே அய்யனார் கோவில் என்ற இடத்தில் இறக்கி விட்டுள்ளனர்.

இந்த நிலையில் மேல்மருவத்தூர் நோக்கி பேருந்து வந்து கொண்டிருந்த போது பேருந்தின் நடத்துனர் பெருமாள் மயக்கம், தலைசுற்றல் ஏற்பட்டு பேருந்தில் சரிந்து விழுந்துள்ளார்.

உடனடியாக மேல்மருவத்தூர் பேருந்து நிலையத்தில் பேருந்து நிறுத்தப்பட்டு நடத்துனர் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு பேருந்து நடத்துனர் பெருமாளை பரிசோதித்த மருத்துவர்கள் இவர் இறந்து விட்டதாக தெரிவித்து உள்ளனர். இந்த சம்பவம் குறித்து மதுராந்தகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் பேருந்தின் நடத்துனரை தாக்கியது சூனாம்பேடு பகுதியைச் சேர்ந்த முருகன் என்பது தெரியவந்தது.

தற்போது அவரை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.