தமிழகத்தை சேர்ந்த மறைசாட்சி தேவசகாயம் பிள்ளைக்கு புனிதர் பட்டம்
1 min read
Consecration of the child of the mystic Devasakaya from Tamil Nadu
15.5.2022
தமிழகத்தை சேர்ந்த மறைசாட்சி தேவசகாயத்திற்கு வாடிகன் நகரில் புனிதர் பட்டம் வழங்கப்பட்டது.
தேவசகாயம்
தமிழகத்தை சேர்ந்த மறைசாட்சி தேவசகாயத்திற்கு வாடிகனில் உள்ள செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் மறைசாட்சி தேவசகாயத்துக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டது. போப் ஆண்டவர் பிரான்சிஸ் புனிதர் பட்டம் வழங்குகினார். அவருடன் சேர்த்து பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 9 மறைசாட்சிகளுக்கும் புனிதர் பட்டம் வழங்கப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் தங்கராஜ், செஞ்சி மஸ்தான் மற்றும் தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தேவசகாயம் புனிதர் பட்டம் பெறுவதன் மூலம் இந்தியா பெருமையடைகிறது. இந்தியாவின் திருமணமான பொதுநிலையினரில் முதல் புனிதர் என்ற பெருமையும் மறைசாட்சி தேவசகாயம் பெற்றுள்ளார். இந்திய மண்ணில் ரத்தம் சிந்தி மறைசாட்சியாக மரித்த முதல் இந்திய புனிதர் என்ற புகழும் அவருக்கு கிடைத்துள்ளது.