உதய்ப்பூர் மாநாட்டில் சோனியா காந்தி உணர்ச்சிப்பூர்வ பேச்சு- “நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம்”
1 min read
Sonia Gandhi’s emotional speech at Udaipur Conference – “We will definitely win”
15.5.2022
காங்கிரஸ் கட்சியின் 3 நாள் சிந்தனை அமர்வு மாநாட்டின் கடைசி நாளான இன்று சோனியா காந்தி நிறைவுரையாற்றினார். அப்போது நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்றார்.
மாநாடு
ராஜஸ்தான் மாநிலம், உதய்ப்பூரில் காங்கிரஸ் கட்சியின் 3 நாள் சிந்தனை அமர்வு மாநாடு – ‘நவ் சங்கல்ப் சிந்தன் ஷிவிர்’ என்ற பெயரில் நடைபெற்றது. அடுத்த நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கும், தொடர் தோல்விகளால் துவண்டு போய் உள்ள கட்சிக்கு புத்துயிரூட்டவும் மாநாடு நடைற்றது.
இந்த மாநாட்டின் கடைசி நாளான இன்று, காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் சோனியா காந்தி நிறைவுரையாற்றினார்.
காங்கிரஸ் மாநாட்டில் கலந்துகொண்டு ஆரவாரம் செய்த கட்சி தொண்டர்களிடம் அவர் பேசியதாவது:-
வெல்வோம்
காங்கிரஸ் தனது கட்சி அமைப்பில் பரந்த அளவிலான சீர்திருத்தங்களுக்கான ஒரு திட்ட வரைபடத்தை ஏற்றுக்கொண்டது.
வெல்வோம், வெல்வோம், வெல்வோம் – அதுவே நமது உறுதி, அதுவே நமது நிலைப்பாடு.
இந்த மாநாட்டின் மூலம், உங்களை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இதை நான் என் குடும்பத்துடன் ஒரு மாலை நேரத்தைக் கழித்தது போல் உணர்ந்தேன்.
பாதயாத்திரை
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை “பாரத் ஜோடோ யாத்திரை”, இந்த ஆண்டு காந்தி ஜெயந்தி அன்று தொடங்குகிறது. கட்சி அமைப்பின் விரிவான பரிந்துரைகள் விரைவாக செயல்படுத்தப்படும். இது மிகவும் பயனுள்ள மற்றும் பலனளிக்கும் மாநாடு என நான் உணர்கிறேன். இந்த ஆக்கபூர்வமான பங்கேற்பு உணர்வில், உங்களில் பலருக்கும் உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும் உங்கள் ஆலோசனைகளை வழங்கவும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஆறு குழுக்களில் ஒவ்வொன்றிலும் நடந்த விவாதங்களின் சுருக்கத்தை நான் பெற்றுள்ளேன். அவர்கள் நம் கட்சியின் நிலைப்பாடுகள், கொள்கைகள் மற்றும் திட்டங்களை அறிவிப்பார்கள். மாநில மற்றும் தேசிய தேர்தல்களுக்கான அறிக்கைகளைத் தயாரிப்பதற்கும் அவை மதிப்புமிக்கதாக இருக்கும்.
கட்சி அமைப்பு குழுவின் யோசனைகள் சில உடனடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், கட்சி அமைப்பின் விரிவான பரிந்துரைகள் விரைவாக செயல்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.