தென்மேற்கு பருவமழை 23-ந் தேதி தொடங்குகிறது
1 min read
The southwest monsoon begins on the 23rd
20.5.2022
இந்தியாவில் தென்மேற்கு பருவமழை 23-ந் தேதி தொடங்குகிறது.
பருவமழை
மேற்கு பருவமழை காலத்தில் தான் அதிக மழை கிடைக்கும். ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு பருவமழை ஜூன் முதல் வாரத்தில் தொடங்குவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு அந்தமான் தீவுகளில் பருவமழை தொடங்குவதற்கான அறிகுறிகள் முன்கூட்டியே தெரிந்தன.
23-ந் தேதி
இதையடுத்து வருகிற 27-ந் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. தற்போது சீதோஷ்ண நிலையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக 27ந் தேதிக்கு பதில் 23ந் தேதியே கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி விடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.