டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் 1.83 லட்சம் பேர் தேர்வு எழுதவில்லை
1 min read
1.83 lakh students failed the DNPSC Group 2 exam
21.5.2022
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் 1.83 லட்சம் பேர் தேர்வு எழுதவில்லை
குரூப்-2
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
தமிழகத்தில் குரூப்-2 முதல்நிலைத் தேர்வு இன்று நடந்தது. இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சார் பதிவாளர் உள்ளிட்ட 116 நேர்முகத் தேர்வு கொண்ட காலி பணியிடங்களுக்கும், நகராட்சி கமிஷனர், தலைமை செயலக உதவி பிரிவு அலுவலர் உள்பட 5,413 நேர்முகத் தேர்வு இல்லாத காலி பணியிடங்களுக்கும் தேர்வு நடந்தது.
குரூப்-2 தேர்வை தமிழகம் முழுவதும் 4 லட்சத்து 96 ஆயிரத்து 247 பேர் ஆண்கள், 6 லட்சத்து 81 ஆயிரத்து 880 பேர் பெண்கள். 48 பேர் மூன்றாம் பாலினத்தவர் தேர்வு எழுதினார்கள். இவர்களில் 14 ஆயிரத்து 531 மாற்றுத்திறனாளிகளும் தேர்வு எழுதினார்கள்.
இந்நிலையில், தமிழகத்தில் இன்று நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தேர்வில் 15 சதவீத தேர்வர்கள் ஆப்சென்ட் என தெரியவந்துள்ளது. அதாவது, 9.94 லட்சம் பேர் தேர்வெழுதிய நிலையில், 1.83 லட்சம் பேர் தேர்வு எழுத வரவில்லை என்று டிஎன்பிஎஸ்சி சார்பில் தெரிவித்துள்ளனர்.