குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்
1 min read
Exciting bath for tourists in the courtyard
23.5.2022
குற்றாலத்தில் குளுமையான சூழல் நிலவுகிறது. அருவிகளில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து குளித்தனர்.
குற்றாலம்
குற்றாலத்தில் குளுமையான சூழல் நிலவுகிறது. அருவிகளில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து குளித்தனர். ஆர்ப்பரிக்கும் தண்ணீர் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கடந்த சில நாட்களாக நன்கு மழை பெய்து வருகிறது. இதனால் ‘தென்னகத்தின் ஸ்பா’ என அழைக்கப்படும் குற்றாலத்தில் சீசன் மிகவும் அருமையாக உள்ளது. அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. குற்றாலத்தில் நேற்று காலையில் இருந்தே சாரல் மழை விட்டுவிட்டு பெய்தது. குளிர்ந்த காற்று வேகமாக வீசியது. நேற்று பகல் முழுவதும் வெயில் இல்லாமல் குளுமையான சூழல் நிலவியது.
இதனால் சுற்றுலா பயணிகள் மிகவும் மகிழ்ச்சியாக காணப்பட்டனர். உற்சாக குளியல் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் நன்றாக கொட்டுகிறது. விடுமுறை நாளான நேற்று முன்தினம் குற்றாலத்தில் உள்ளூர் மட்டுமன்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் குவிந்தனர். இதனால் வரிசையாக நின்று அருவிகளில் குளித்துச் சென்றனர். நேற்று சுற்றுலா பயணிகளின் கூட்டம் சற்று குறைவாக காணப்பட்டது. இதனால் அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.