June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 1,675 ஆக குறைந்தது

1 min read

Daily corona exposure in India dropped to 1,675

24/5/2022
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 1,675 ஆக குறைந்தது.

இந்தியாவில் கொரோனா

இந்தியாவில், சில நாட்களுக்கு முன்பு தினசரி கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்துக்கு கீழ் குறைந்தது. பிறகு மீண்டும் 2 ஆயிரத்தை தாண்டியது. இருப்பினும், ஓரிரு நாட்களாக தொற்று குறைந்து வருகிறது.
இந்தநிலையில் இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் ஒரே நாளில் 1,675 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது. கடந்த ஞாயிற்றுக்கிழமை 2,226 திங்கட்கிழமை 2,022 ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று 1,675 ஆக குறைந்தது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4,31,38,393 லிருந்து 4,31,40,068 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் ஒரே நாளில் 1,635 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இந்தியாவில் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,25,99,102 லிருந்து 4,26,00,737 ஆக உயர்ந்துள்ளது.

31 பேர் சாவு

இந்தியாவில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 31 பேர் உயிரிழந்தனர். இதுவரை 5,24,490 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 14,832 லிருந்து 14,841 ஆனது. இந்தியாவில் ஒரே நாளில் 13,76,878 கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 192.52 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இவ்வாறு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.