கோவில் திருவிழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சியில் ஆபாசம் இருக்கக்கூடாது – மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
1 min read
No pornography in temple festivals dancing and singing – Madurai high Court order
24.5.2022
கோவில் திருவிழாக்களில் நிபந்தனைகளை மீறி ஆபாசமாக வார்த்தைகள், ஆபாசமான நடனங்களும் இருந்தால் சம்பந்தப்பட்ட போலீசார் உடனடியாக சட்டரீதியான நடவடிக்கை தொடரலாம் என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதி உத்தரவிட்டார்.
ஆடல்பாடல்
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் கோவில்களில் தற்போது சித்திரை திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றது. இந்த திருவிழாக்களில் காலம் காலமாக கலாசார ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம்.
ஆடல், பாடல் நிகழ்ச்சியில் நடத்தப்படுவதால் சில இடங்களில் சட்ட ஒழுங்கு பிரச்சனையும் மேலும் தற்போது-கொரோனா தொற்று பாதிப்புக்கு பின் நடைமுறை தளர்த்தப்பட்டு உள்ள நிலையில் காவல் துறையினர் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கவில்லை. இதனால் கோவில் திருவிழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதிக்க தர கோரி விடுமுறை கால நீதிமன்றத்தில் மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி, விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதி தமிழ்ச்செல்வி தனது உத்தரவில் கூறியிருப்பதாவது:-
ஆபாசம் கூடாது
ஆடல், பாடல் நிகழ்ச்சியில் சட்ட ஒழுங்கு பேணப்பட வேண்டும். எந்த பிரச்சினைகளும் வராத வண்ணம் மனுதாரர் தரப்பில் உறுதி அளிக்க வேண்டும்.
ஆடல், பாடல் நிகழ்ச்சியில் ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்தியோ ஆபாசமான நடனங்கள் இருக்கக்கூடாது. இந்த நிபந்தனைகளை மீறி ஆபாசமாக வார்த்தைகள், ஆபாசமான நடனங்களும் இருந்தால் சம்பந்தப்பட்ட போலீசார் உடனடியாக நிகழ்ச்சியை நிறுத்தி சட்டரீதியான நடவடிக்கை தொடரலாம்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார். இதனை அனைத்து வழக்குகளும் முடித்து வைக்கப்பட்டது.
==
கமல் சினிமா போஸ்டர் விவகாரம்
மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் மீது வழக்கு
மதுரை,மே.25-
கமல் சினிமா போஸ்டர் விவகாரம் தொடர்பாக மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் மீது வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
மதுரை மாநகரில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டி.
கமல் பட போஸ்டர்
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்திருக்கும் ‘விக்ரம்’ திரைப்படம், தமிழகத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
அந்தப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியானது. இதை வரவேற்று மதுரையில் மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தன.
அதில் “சில வேடிக்கை மனிதரை போல் நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ? வா, பாத்துக்கலாம்” என்ற வாசகங்களுடன் மதுரை மாநகரில் திடீர்நகர், தெற்குவாசல் உள்பட பல்வேறு பகுதிகளில் சினிமா போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.
வழக்குப்பதிவு
இதுதொடர்பாக மாநகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகளான மதுரை கிழக்கு-மேலூர் தொகுதி செயலாளர் கதிரேசன், மதுரை மண்டல பொறுப்பாளர் வினோத் சேது ஆகிய இருவரும் அந்த போஸ்டரை மாநகரம் முழுவதும் ஒட்டியது தெரியவந்தது.
இதையடுத்து மேற்கண்ட கட்சி நிர்வாகிகள் 2 பேர் மீதும் திடீர்நகர், தெற்குவாசல் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களிடம் இது தொடர்பாக மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.