கபில்சிபல் காங்கிரசில் இருந்து சமாஜ்வாடி கட்சிக்கு மாறினார்
1 min read
Kapil Sibal switched from the Congress to the Samajwadi Party
25.5.2022-
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபில் அகிலேஷ் யாதவ் முன்னிலையில் சமாஜ்வாடி கட்சியில் இணைந்தார்.
கபில்சிபல்
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக விளங்கியவர். அகில இந்திய அளவில் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வரும் காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு எதிராக சில தலைவர்கள் போர்க்கொடி தூக்கி வருகிறார்கள். காங்கிரஸ் கட்சியில் இருந்த 23 அதிருப்தி தலைவர்கள் ஒருவராக கபில் சிபிலும் இருந்தார்.
இந்த நிலையில் அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சியில் இணைந்துள்ளார். கட்சியில் இருந்து விலகிய கபில் சிபில் உ.பி. மாநிலங்களவை தேர்தலில் சமாஜ்வாடி சார்பில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார்.
அவர் கடந்த16-ம் தேதியன்றே தனது ராஜினாமா கடிதத்தை கட்சி தலைமைக்கு அனுப்பி விட்டதாக கபில் சிபில் கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.