பிரதமர் மோடிக்கு கிடைத்த பரிசு பொருட்கள் ரூ.22 கோடிக்கு ஏலம்
1 min readPrime Minister Modi’s gift items auctioned for Rs 22 crore
31.5.2022
பிரதமர் மோடிக்கு கிடைத்த பரிசு பொருட்களை ஏலம் விட்டதில் கிடைத்த ரூ.22 கோடி கங்கை நதியை தூய்மைப்படுத்தும் திட்டத்திற்கு வழங்கப்படுகிறது.
பரிசு பொருட்கள்
பிரதமர் மோடிக்கு பலரும் வழங்கிய பரிசு பொருட்கள் ஏலம் விடப்பட்டது. கடந்த 2019-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை 3 கட்டங்களாக புதுடெல்லியில் உள்ள தேசிய நவீன கலைக்கூடம் இந்த ஏலத்தை நடத்தியது.
முதல் கட்டத்தில் 1805 பொருட்களில் 240 பொருட்களும் 2-வது கட்ட மாக 2772 பொருட்களில் 612 பொருட்களும் ஏலம் விடப்பட்டது. 3-வது கட்டமாக 1348 பொருட்கள் ஏலம் விட ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் 391 பொருட்கள் ஏலம் போனது. இந்த ஏலத்தின் மூலம் மொத்தம் ரூ 22.5 கோடி கிடைத்தது.
முதல் ஏலத்தில் ரூ.3.1 கோடியும், 2-வது ஏலத்தில் ரூ.3.6 கோடியும் 3-வது ஏலத்தில் அதிகமாக ரூ.15.8 கோடியும் கிடைத்தது.
இந்த பணம் கங்கையை தூய்மைப்படுத்தும் திட்டத்திற்கு வழங்கப்படுகிறது.