காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா உறுதி
1 min read
Corona reassures Congress President Sonia Gandhi
2.6.2022
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா உறுதி
செய்யப்பட்டது. இதையடுத்து தனிமைப்படுத்திகொண்ட அவருக்கு மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
சோனியாவுக்கு கொரோனா
சோனியா காந்தி, கடந்த சில நாட்களாக தொடர்ந்து காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து உரையாடி வரும் நிலையில், நேற்று அவருக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து எடுக்கப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது.
இதையடுத்து தனிமைப்படுத்திகொண்ட அவருக்கு மருத்துவ சிகிச்சை வழங்கப்படுகிறது.
அவர் தற்போது குணமடைந்து வருவதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.