தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்துமுதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
1 min read
Chief Minister MK Stalin’s advice on the law and order situation in Tamil Nadu
4.5.2022
தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து ஆய்வுகூட்டம் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது
சட்டம் ஒழுங்கு
தமிழ்நாடு முதல் அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பு ஏற்றபின்னர் மாநில வளர்ச்சிக்காக எண்ணற்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதேபோல் சட்டம் ஒழுங்கும் சிறப்பாக இருக்க மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கிறார். இதற்காக அவ்வப்போது அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த தவறுவது இலலை
கடந்த மார்ச் மாதம் அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியபோது, “இந்த ஆட்சியினுடைய மதிப்பீடு என்பது சட்டம் – ஒழுங்கினைப் பராமரிப்பதில்தான் உள்ளது என்பதை நீங்கள் அனைவரும் முழுமையாக உணர்ந்து செயல்பட வேண்டும்” என்று மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல் துறை, வனத்துறை அதிகாரிகளிடம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.
இந்த நிலையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக கொலைகள் நடக்கின்றன. அதேபோல சென்னையில் விசாரணை கைதி இறந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில் இன்று தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து ஆய்வுகூட்டம் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ,சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் தலைமை செயலாளர் இறையன்பு ,தமிழக டிஜிபி சைலேந்திர பாபு ,மற்றும் சென்னை காவல் ஆணையர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவ்டிக்கைககள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது .குறிப்பாக இணையவழி குற்றசம்பவங்களை தடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவ்டிக்கைககள் குறித்து காவல்துறை அதிகாரிகளுக்கு முதல் அமைச்சர் அலோசனைகைளை வழங்கினார்.
மேலும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.