தமிழகத்தில் ஒரே நாளில் 105 பேருக்கு கொரோனா
1 min read
Corona for 105 people in one day in Tamil Nadu
4.6.2022
தமிழகத்தில் ஒரே நாளில் 105 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்வில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழகத்தில் இன்று (ஜூன் 4) 12,731 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், சென்னையில் 61; செங்கல்பட்டில் 13; காஞ்சிபுரம் 7; திருவள்ளூர் மற்றும் திருச்சி 3; கோவையில் 7; மதுரை, திருநெல்வேலி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, ராணி்பேட்டை மற்றும் சிவகங்கை, தலா ஒருவரையும் சேர்த்து 105 பேருக்கு தொற்று உறுதியானது.
தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,55,976 ஆக அதிகரித்துள்ளது. இன்று 61 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34,17,152 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனா தொற்றால் பலியானோர் எண்ணிக்கை 38,025 ஆக உள்ளது.
சென்னையில் குடும்ப தொற்று காரணமாக அதிகரித்து வருகிறது. தொற்று பாதிப்பால் சிகிச்சை பெற்றவர்களில் 61 பேர் குணமடைந்தனர். மருத்துவமனைகளில் 799 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.