பீகாரில் குளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் 8 பேர் சாவு
1 min read
8 killed in Bihar car crash
11.6.2022
பீகாரில் கார் ஒன்று குளத்தில் கவிழ்ந்ததில் 8 பேர் உயிரிழந்து உள்ளனர்.
கார் கவிழந்தது
பீகாரின் பூர்னியா மாவட்டத்தில் கஞ்சியா கிராமத்தில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. தரபாடியில் இருந்து புறப்பட்டு கிஷான்கஞ்ச் நோக்கி சென்ற அந்த கார் நேற்று இரவு திடீரென சாலையில் இருந்து விலகி அருகேயிருந்த குளத்திற்குள் கவிழ்ந்தது. இந்த விபத்தில் நீரில் மூழ்கி 8 பேர் உயிரிழந்து உள்ளனர்.
இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ பகுதிக்கு சென்ற போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதுவரை 8 உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டு உள்ளனர். அவர்கள் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.