சுகாதாரத்து துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அதிரடி மாற்றம்
1 min read
Health Secretary Radhakrishnan changes action
12.6.2022
சுகாதாரத்துறை செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணன் மாற்றப்பட்டு உள்ளார். புதிய செயலராக செந்தில்குமார் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
ராதாகிருஷ்ணன்
சகாதாரத்துறை செயலாளராக ராதாகிருஷ்ணன் இருந்துவந்தார். அ.தி.மு.க. ஆட்சியல் கொரோனா உச்சக்கட்டத்தில் இருந்தபோது அவர் இந்த துறைக்கு மாற்றப்பட்டார். தி.மு.க. ஆட்சிக்கு வந்தபிறகும் அவர் அதே துறையில் நீடித்தார்.
இந்த நிலையில் அவர் திடீரென்று மாற்றப்பட்டு உள்ளார். அவர் கூட்டுறவு, உணவு நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மருத்துவம் மற்றும் மக்கள்நல்வாழ்வுத்துறையின் புதிய செயலாளராக கு.செந்தில்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
உள்துறை செயலராக இருந்த எஸ்.கே பிரபாகர் மாற்றப்பட்டு பணீந்திர ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார். நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள்துறை முதன்மைச் செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். வணிகவரித்துறை முதன்மைச் செயலாளராக தீரஜ்குமர் நியமிக்கப்பட்டுள்ளார். வருவய் நிர்வாக ஆணையராக அல்லது கூடுதல் தலைமைச் செயலாளராக எஸ்.கே.பிரபாகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.