இந்தியாவில் புதிதாக8,084 பேருக்கு தொற்று
1 min read
Newly infected 8,084 people in India
13.6.2022
இந்தியாவில் தினசரி கொரோனா பாதி்ப்பு நேற்றைவிட இன்று சற்று குறைந்தது. ஒரே நாளில் புதிதாக 8,084 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.
இந்தியாவில் கொரோனா
இந்தியாவில் கொரோனா பரவல் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது. கடந்த சனிக்கிழமை 8,329 ஞாயிற்றுக்கிழமை 8,582 ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று காலை 8,084 ஆக குறைந்தது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4,32,22,017 லிருந்து 4,32,30,101 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 44,513 லிருந்து 47,995 ஆனது. தொற்றால் நாட்டில் 10 பேர் பலியாகினர். இதுவரை நாட்டில் 5 லட்சத்து 24 ஆயிரத்து 771 பேர் தொற்றுக்கு இரையாகி உள்ளனர். கொரோனா தொற்றில் இருந்து இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தி்ல்4,592 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 4 கோடியே 26 லட்சத்து 57 ஆயிரத்து335 பேர் தொற்றில் இருந்து குணம் அடைந்திருக்கிறார்கள்.
தடுப்பூசி
நாட்டில் கடந்த ஒரே நாளில் 11 லட்சத்து 77 ஆயிரத்து 146 பேருக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை நாடு முழுவதும், மொத்தம் 195 கோடியே 19 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
மேற்றணட தகவலை சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.