டிராஜேந்தர் சிகிச்சைகாக அமெரிக்கா பயணம்- உருக்கமான பேட்டி
1 min read
Travel to the United States for Trajectory Treatment- Interview
14.6.2022
டிராஜேந்தர் உயர் சிகிச்சைகாக அமெரிக்கா சென்றார். அவர் விமான நிலையத்தில் உருக்கமாக பேட்டி அளித்தார்.
டி.ராஜேந்தர்
திரைப்பட டைரக்டரும், நடிகருமான டி.ராஜேந்தருக்கு கடந்த மாதம் திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
டி.ராஜேந்தரை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு வயிற்றில் ரத்த கசிவு இருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து டி.ராஜேந்தருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
டி.ராஜேந்தரை உயர் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா அழைத்து செல்லும்படி டாக்டர்கள் அறிவுறுத்தினர்.
அமெரிக்கா சென்றார்
இதைத்தொடர்ந்து டி.ராஜேந்தரை அமெரிக்கா அழைத்து செல்வதற்கான ஏற்பாடுகள் கடந்த சில நாட்களாக நடந்தன. விசா நடைமுறைகளும் முடிந்துள்ளன. இதையடுத்து டி.ராஜேந்தர் இன்று இரவு 9.30 மணி விமானத்தில் அமெரிக்கா சென்றார். அவருடன் குடும்பத்தினரும் செல்கிறார்கள். அமெரிக்காவில் உள்ள பிரபல ஆஸ்பத்திரியில் டி.ராஜேந்தருக்கு சிகிச்சைகளை தொடர்கிறார்கள்.
பேட்டி
இந்த நிலையில், விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த டி. ராஜேந்தர், நான் இன்றைக்குத்தான் போகிறேன் அமெரிக்கா ஆனால் எப்போதோ போய்விட்டார் எங்கேயோ போய்விட்டார் என்று எழுதினார்கள் சேதி.
பலர் செய்த பிரார்த்தனை அவர்கள் செய்த ஆராதனை அதனால் இங்கு நிற்கிறேன். எனக்காக பிரார்த்தனை செய்த என்னுடைய ரசிகர்கள், சிம்புவின் ரசிகள், பொதுமக்கள் அனைவருக்கும் நன்றி.
அதைவிட என்னுடைய தாய்க்கழகம் திமுக கழகத்தின் மறைந்த தலைவர் கலைஞரின் அன்பு மகன் முதல்வர் ஸ்டாலினுக்கும், உதயநிதிக்கும் நன்றி. நான் மருத்துவமனையில் இருக்கும் போது உதயநிதி ஸ்டாலின் தினமும் தொலைபேசியில் அழைத்து என்னை நலம் விசாரித்தார். உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் எனக்காக பிரார்த்தனை செய்தார்கள். என் ரசிகர்கள் இருக்கும் வரைக்கும் எனக்கு ஒன்றும் ஆகாது, தயவு செய்து வதந்திகளை நம்பவேண்டாம்.
சிலம்பரசன்
இன்று நான் வெளிநாட்டிற்கு போவதற்கு காரணம் என் மகன் சிலம்பரசன். வெந்து தணிந்தது காடு படத்தின், ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியை சிம்பு தள்ளிவைத்துவிட்டு, பத்து தலை திரைப்படத்தின் படப்பிடிப்பை தள்ளிவைத்துவிட்டு, கிட்டத்தட்ட 12 நாட்களுக்கு மேல் அமெரிக்கா சென்று என் சிகிச்சைக்கான ஏற்பாடுகளை கவனித்து வருகிறார்.
பெற்றோர்களை முதியோர் காப்பகத்தில் விடும் இந்த கலிகாலத்தில் என் மகனை நினைத்து பெருமைப்படுகிறேன். சிம்புவை பார்க்கும்போது “ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனை சான்றோன் எனக்கேட்ட தாய்” என சொல்வார்கள் இப்படி ஒரு மகனை பெற்றதற்காகவும், சிஷ்யனாக பெற்றதற்காக பெருமை படுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.